பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டார் அரச குடும்ப வாரிசு!

பிரிட்டன் அரச குடும்ப வாரிசான இளவரசர் லூயிஸ், தனது 3ஆவது பிறந்த நாளையொட்டி முதன்முறையாக வில்லிகாக்ஸ் நர்சரி பள்ளிக்கு புதன்கிழமை சைக்கிளில் சென்றார். இதையொட்டி, கெனிங்ஸ்டான் அரண்மனையில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை அவரின் தந்தையும் இளவரசருமான வில்லியம், தாயார் கேத்தரீன் ஆகியோர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதே வில்லிகாக்ஸ் நர்சரி பள்ளியில்தான் லூயிஸின் மூத்த சகோதரி இளவரசி சார்லோட்டும் கல்வி பயின்றார். இங்கு குழந்தையின் வயது மற்றும் அவர்கள் சேரும் பருவத்தை பொறுத்து, 3,400 பவுண்ட் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ராயல் ஆல்பெர்ட் ஹால் அருகே அமைந்துள்ள இந்தப் பள்ளி, கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் ஆய்வின்போது நன்மதிப்பை பெற்றது.

இளவரசர் லூயின் மூத்த சகோதரர் இளவரசர் ஜார்ஜ், நார்போலிக்கில் உள்ள வெஸ்டேக்கர் மாண்டிசோரி நர்சரி பள்ளியில் கடந்த 2016இல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தின் 5ஆவது வாரிசான லூயிஸ், ராயல் பாரம்பரியத்திலிருந்து தனியார் நர்சரி பள்ளிக்கு செல்லும் சமீபத்திய வாரிசு ஆவார். அரச குடும்பத்தில் பிறந்தவர்கள், தனியார் பள்ளியில் சேரும் கலாசாரத்தை அவரது தந்தை வில்லியம் தனது பால்ய பருவத்தில், கடந்த 1985இல் மேற்கு லண்டன், கெனிங்ஸ்டன் அரண்மனை அருகே உள்ள மைனர்ஸ் நர்சரி பள்ளியில் சேர்ந்ததின் மூலம் தொடங்கிவைத்தது நினைவுகூரத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

fifteen − twelve =