பிரஷர் குக்கரை போல் சோதனைகளை சந்திக்கும் ஆஸ்திரேலியர்கள்!

இந்தியாவில் உருமாறிய டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் ஆஸ்திரேலியாவில் இன்று மட்டும் இதுவரை 200 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் பெரிய நகரங்களான சிட்னி, பிரிஸ்பேன், பெர்த், டார்வின், டவ்ன்ஸ்வில்லே மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகியவற்றில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு ஆஸ்திரேலியாவின் அலைஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியிலும் டெல்டா தொற்று கண்டறியப்பட்டதால், அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு தொற்றின் வேகம் அதிகரித்துவருவதால், ஒரு பிரஷர் குக்கரை போல் தாங்கள் அழுத்தத்தை சந்தித்து வருவதாக மாகாண தலைவர்கள் விழிப்பிதுங்கி போய் நிற்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

5 × four =