விபத்தில் கர்ப்பணி பரிதாப சாவு

இங்கிலாந்தின் நார்த்தம்ப்டன் நகரின் கிரேய்பிரையர்ஸ் மற்றும் ஹார்ஸ்மார்க்கெட் ஜங்ஷனில் கடந்த சனிக்கிழமை 39 வயது கர்ப்பிணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அந்த பெண்ணின் மீது மோதியதில், அவரும், அவரது வயிற்றில் இருந்த 6 மாத சிசுவும் உயிரிழந்தனர். வாகன ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த கோர சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 31 வயது வாகன ஓட்டுநரை கைது செய்தனர்.

Add your comment

Your email address will not be published.

eight − five =