கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் பிரிட்டன் அரசு தோல்வி

தேசிய தணிக்கை அலுவலகம் குற்றச்சாட்டு

 

கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள பிரிட்டன் அரசு தோல்வியடைந்துவிட்டதாக தேசிய தணிக்கை அலுவலகம் குற்றம்சுமத்தியுள்ளது. மேலும், பெருந்தொற்றால் ஏற்பட்ட சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்குமாறு அமைச்சர்களிடம் தேசிய தணிக்கை அலுவலகம் கேட்டுக் கொண்டது.

பிரிட்டனில் இதுவரை கரோனா தொற்றுக்கு 1,27,000 பேர் உயிரிழந்தனர். 3 கோடியே 86 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத வரையிலான நிலவரப்படி, கரோனா தொற்றை எதிர்கொள்ள பிரிட்டன் அரசு 372 பில்லியன் பவுண்ட் செலவிட்டதாகவும், கரோனாவை எதிர்கொள்ளும் முயற்சிகளில், சிலவற்றில் மட்டுமே அரசு வெற்றி கண்டதாகவும் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

கரோனாவுக்கு எதிரான போரில் அரசு துரிதமாகவும், தீர்க்கமாகவும் செயல்பட்டதாக விளக்கம் அளித்திருந்த நிலையில், தேசிய தணிக்கை அலுவலகம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

3 × one =