பாஜகவின் நீட்சி தேர்தல் ஆணையம் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சியின் நீட்சி தான் தேர்தல் ஆணையம். அக்கட்சி வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்றார் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் ஐ பேக் நிறுவன உரிமையாளரான அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தனிப்பட்ட ஆலோசகராக செயல்பட்டுவந்தார். தற்போது மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாஜகவின் நீட்சியை போல், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலை வகுப்பதிலும், விதிமுறைகளை வளைப்பதிலும், பாஜகவுக்கு எவ்வளவு முடியுமோ அத்தனை உதவிகளையும் தேர்தல் ஆணையம் செய்து கொடுக்கிறது.
நான் இப்போது மேற்கொண்டுவரும் பணியை மேலும் தொடர விரும்பவில்லை. போதுமான அளவுக்கு நான் பணியாற்றிவிட்டேன். எனவே, இடைவேளை எடுத்து, வேறு ஏதாவது செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.
அப்போது, நீங்கள் அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் இணைய போகிறீர்களா? என்று கேட்டதற்கு, நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி. ஆகையால், நான் பின்வாங்கி, மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியத்தை தொடர போகிறேன். இனிமேல், எந்தக் கட்சிக்கும் வியூக வகுப்பாளராக வேலை பார்க்க போவதில்லை என்று பதிலளித்தார்.

Add your comment

Your email address will not be published.

five × five =