போதைமருந்து கடத்தல்காரர்களிடம் கைவரிசை காட்டிய போலீஸ் அதிகாரிக்கு ஜெயில்

 

போதைமருந்து கடத்தல்காரர்களிடமே பணத்தை திருடிய போலீஸ் அதிகாரிக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் அதிகாரி காசிப் முகமது. 10 ஆண்டுகளாக காவல் துறையில் பணியில் இருக்கும் இவர், துபாயில் உள்ள போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்தார். இதனால், லண்டனில் அந்தக் கும்பலுக்கு விரோதமான பிற கும்பல்கள் போதை மருந்துகளையும், பணத்தையும் (பவுண்ட்) கடத்தினால், அந்த வாகனத்தை காவலர் சீருடையில் திட்டமிட்டு மறித்து பணத்தை பறித்து துபாய் கும்பலுக்கு அனுப்பிவைத்து, அதன்மூலம் தானும் கமிஷன் பெற்றுவந்தார்.
இவருக்கு உதவியாக சஷாத்கான், சபாஷ்கான், மோஷின்கான், கேர்கெல் மற்றும் மரியா ஷா என்ற பெண் என 5 பேர் செயல்பட்டது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸ் அதிகாரி காசிப் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த மெட்ரோபாலிட்டன் போலீசார், அவர்களை ஹிஸ்ஹானர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கின் இறுதிகட்ட வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி டோம்லின்சன், போலீஸ் அதிகாரி காசிபுக்கு 8 ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேருக்கும் தலா 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Add your comment

Your email address will not be published.

three + 8 =