பிள்ளைகள் செய்த தவறுக்கு பெற்றோரை தண்டித்த காவல் துறை!

இங்கிலாந்தின் டெர்பிஷிர் ஷில்டன் பகுதியில் உள்ள கால்பந்து கிளப்பில் சனிக்கிழமை இரவு ஏராளமான இளைஞர்கள் கூடி மது விருந்துடன் கும்மாளமிட்டனர். ஒருசிலர் அங்கேயே வாந்தியும் எடுத்து அந்த இடத்தை நாசக்காடாக மாற்றினர். இதையறிந்த உள்ளூர் காவல் துறை அங்கு வருவதற்குள் இளைஞர்கள் தப்பினர். இதைத்தொடர்ந்து, அவர்களின் பெற்றோரை தொடர்புகொண்ட காவல் துறையினர், இளைஞர்களால் சின்னாபின்னமான அந்த இடத்தை பெற்றோரை வைத்து சுத்தப்படுத்தினர். மேலும், இளைஞர்கள் விட்டுச்சென்ற காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில் ஆகிய குப்பைக் கூளங்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Add your comment

Your email address will not be published.

nine + 17 =