கொலை வழக்கில் 33 ஆண்டுளாகியும் துப்புதுலங்கவில்லை

மன்னிப்பு கோரினார் லண்டன் போலீஸ் கமிஷனர்

தென்கிழக்கு லண்டன் சைடன்ஹாம் பகுதியில் உள்ள கோல்டன் லயன் பப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு டேனியல் மோர்கன் என்பவர் கோடரியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து விசாரித்த தனிக்குழு, இந்த வழக்கை காவல் துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு மூடிமறைத்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. இதை தற்போது ஒப்புக்கொண்ட லண்ட்ன் போலீஸ் கமிஷனர் டேம் கிரசிடா டிக், இந்த கொலை வழக்கில் யாரையும் சட்டத்துக்கு முன் நிறுத்ததாதற்காகவும், நாங்கள் செய்த தவறால் உயிரிழந்த டேனியலின் குடும்பத்தினருக்கு வலியை அதிகப்படுத்தியதற்காகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்.

Add your comment

Your email address will not be published.

two × 4 =