பணத்துக்காக பதவியை துறப்பார் பிரதமர்

முன்னாள் நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த தேர்தல் நடந்து முடிந்ததும், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில், பணத்துக்காகவும், குதூகலத்துக்காகவும் தனது பதவியை துறப்பார் என அவரது முன்னாள் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட டொமினிக் கமிங்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேசமயம் இந்தக் குற்றச்சாட்டை பிரதமரின் ஊடக செயலாளர் திட்டவட்டமாக மறுத்தார். இங்கிலாந்தில் அடுத்த பொதுத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. ஆனாலும், அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

Add your comment

Your email address will not be published.

2 × three =