நன்கொடை விவகாரம் : பிரதமர் கருத்து

நன்கொடை விவகாரத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் டவ்ணிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை அண்மையில் மிகுந்த பொருள்செலவில் புதுப்பித்ததாகவும், இதற்காக கன்சர்வேடிவ் கட்சி நன்கொடைதாரர்களிடம் இருந்து ரகசியமான முறையில் அவர் நிதி பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பிரதமரின் முன்னாள் தலைமை ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது அரசியல் அரங்கில் புயலை கிளப்பியது. இதை கையில் எடுத்த தொழிலாளர் கட்சி, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையான விசாரணை நடத்தி, பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காய் நகர்த்தியது.

இதனிடையே, பிரதமர் வீட்டை புதுப்பிப்பதற்கான தொகையை தனிப்பட்ட முறையில் செலுத்தியதாகவும், இதில் முறைகேடு ஏதுமில்லை என்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து லண்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முறையாக செய்தியாளர்களிடம் கருத்து கூறினார்.
அப்போது, இந்த பிரச்னை குறித்து சொல்வதற்கோ அல்லது பிரகடனப்படுத்துவதற்கோ ஏதுமிருந்தால், விரைவில் அறிவிக்கப்படும் என பதிலளித்தார். இதனிடையே, பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கு எம்.பி.க்களிடம் அவர் தரப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜான்சன் கேஸ் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) பதிலளிக்க இருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

20 − 15 =