இங்கிலாந்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையின் விலை உயர்வு

 

 

இங்கிலாந்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் விலை 5 பவுண்டில் இருந்து 10 பவுண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் பெரிய கடைகள் என அனைத்து கடைகளிலும் இந்தக் கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை (மே 21) முதல் நடைமுறைக்கு வருகிறது. இங்கிலாந்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு 5 பவுண்ட் கட்டணம் கடந்த 2015இல் விதிக்கப்பட்டது. அதன்பின்னர், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு 95 சதவீதம் வரை குறைந்தது.

நெகிழி பைகளின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்குமாறு பூவுலகின் நண்பர்கள் (பிரண்டஸ் ஆப் எர்த்) குழுவினர் மேற்கொண்ட பிரசாரத்தின் பயனாக தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், இதேபோல் காகிதப் பைகளுக்கும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

seventeen − 3 =