கேரளாவில் மீண்டும் அரியணை ஏறுகிறார் பினராயி விஜயன்

கேரளத்தில் இடதுசாரி கட்சி 95 முதல் 100 தொகுதிகள் வரை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. அக்கட்சி தலைவர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கேரளாவை பொருத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் ஒருமுறை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த கட்சி, தொடர்ந்து அடுத்த முறையும் வெற்றி பெற்று அரியணை ஏறியதாக வரலாறு இல்லை.
இந்த நிலையை பினராயி விஜயன் தகர்த்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிக் கனியை ருசித்திருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட பெருமை அவரை சாரும். அதிலும் கடந்த முறை கிடைத்த 91 தொகுதிகளை விட இந்த தடவை அதிக இடங்களில் இடதுசாரி கட்சி வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 45 முதல் 50 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று கேரளத்தில் தடம்பதித்த பாஜகவுக்கு, இந்த தடவை குறைந்தது 6 தொகுதிளாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் கும்மனம் ராஜசேகரன், சுரேந்திரன், சோபா சுரேந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரின் வெற்றிவாய்ப்பு, மாலை 4.45 மணிவரையிலான நிலவரப்படி கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

Add your comment

Your email address will not be published.

eleven + eleven =