சேற்றில் சிக்கிய மிதக்கும் உணவகம்

 

11 பேர் பத்திரமாக மீட்பு

 

இங்கிலாந்தின் சல்போக் பகுதியில் மிதக்கும் உணவகம் என்று அழைக்கப்படும் படகு உணவகம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு படகில் பயணித்தவாறு உணவு அருந்திக் கொண்டே இயற்கையின் அழகை கண்டுகளிக்கலாம். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மிதக்கும் உணவகத்தில் அமர்ந்தவாறு 8 பயணிகள் இன்பமாக பொழுதைக் கழித்துக் கொண்டனர். இந்நிலையில், பின் மில் பகுதியில் சென்றபோது திடீரென சேற்றில் சிக்கியது அந்த படகு.

சிறிதுநேரத்தில் படகு மூழ்க தொடங்கியதால், அதிலிருந்த பயணிகளும், சிப்பந்திகளும் அபயக்குரல் எழுப்பினர். தகவலறிந்த மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறிய படகின் உரிமையாளர், படகில் இருந்த 420 லிட்டர் டீசல் மாயமானதாகவும் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

16 + 14 =