பிலிப்பைன்சில் விமான விபத்து; 17 சடலங்கள் மீட்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுலு மாகாணம் ஜோலா விமானப் படைதளத்தில் சற்று முன் சி130 என்ற ராணுவ விமானம் தரையிறங்க முயன்றபோது, திடீரென அது ஓடுபாதையை விட்டு விலகியது. இதனால், விமானம் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. சுதாரித்துத் கொண்ட மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். 85 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் இருந்து, 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Add your comment

Your email address will not be published.

nineteen − eleven =