இந்திய கரோனாவுக்கு எதிராக திறம்பட செயலாற்றும் பைஸர், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகள்

 

ஆய்வில் தகவல்

 

பைஸர், அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை இரு தவணை செலுத்திக் கொள்ளும்பட்சத்தில், இந்திய வகை கரோனா தொற்றை எதிர்த்து அவை திறம்பட வினைபுரிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம் இரு தடுப்பூசிகளையும் முதல் தவணை எடுத்துக் கொண்ட நாளிலிருந்து 3 வாரம் வரையிலும் இவற்றின் செயல்திறன் 33 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதே வீதம் கேண்ட் நாட்டிலிருந்து பரவிய வைரசுக்கு எதிராக 50 சதவீதம் வரை செயல்புரிந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை, மருத்துவமனைகளில் கரோனா பாதித்தவர்கள் அனுமதிக்கப்படுதையும், இறப்பையும் தடுப்பூசிகள் பெருமளவு தவிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசிகளை இரண்டு தவணை பெற்றுக் கொள்வதற்கான அவசியத்தையும் இந்த ஆய்வு மேற்கோள்காட்டுகிறது.

இங்கிலாந்தில் ஜூன் 21ஆம் தேதி இறுதிகட்ட தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் புதுநம்பிக்கை அளிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் மாத் ஹான்காக் கூறினார்.

Add your comment

Your email address will not be published.

four × 2 =