சிங்கக் குட்டியை அதன் உரிமையாளரிடமே ஒப்படையுங்கள்

கம்போடியா பிரதமர் உத்தரவு

சீனாவை சேர்ந்தவர் ஜாய் ஷின் ஜியாங். தற்போது கம்போடியாவில் வசித்துவரும் இவர், ஆசை ஆசையாக 18 மாத சிங்கக்குட்டி ஒன்றை வளர்த்துவந்தார். இதை வைத்து சமீபத்தில் டிக் டாக் செய்து விளையாடியபோது, அந்த வீடியோ கம்போடிய அதிகாரிகள் கண்ணில் பட்டது. அந்த சிங்கத்தை ஷின் ஜியாங் கடத்திக் கொண்டுவந்ததாக கருதிய அதிகாரிகள், 75 கிலோ எடைகொண்ட சிங்கக் குட்டியை பறிமுதல் செய்தனர்.

 

இதனால், விரக்தி அடைந்த அவர், சமூக வலைதளங்களில் குமுறினார். இதை பார்த்த கம்போடிய பிரதமர் ஹன் சென், உடனடியாக அந்த சிங்கக் குட்டியை அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், அவரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 ஆயிரம் டாலரையும் அவரிடமே திரும்ப செலுத்த அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

twenty − 19 =