தண்ணீருக்காக உணவையே தியாகம் செய்யும் அவலம்!

உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது தண்ணீர். பருவநிலை மாற்றம், வறட்சி, பருவமழை பொய்த்தல் உள்ளிட்ட காரணங்களால், அடிப்படை தேவைகளில் ஒன்றான தண்ணீரை இன்றைக்கு காசு கொடுத்து வாங்கக் கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அந்த வகையில், பிரிட்டனில் பொதுமக்கள் தங்கள் குடும்ப செலவுகள்போக மாத வருமானத்தில் 5 சதவீதத்தை தண்ணீருக்காக ஒதுக்க வேண்டியுள்ளது.

தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து வறுமையில் வாடுவதால், தண்ணீர் கட்டணத்தைக் கூட செலுத்த இயலாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும், ஒருசில குடும்பத்தினர் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதற்காக உணவையே தியாயகம் செய்வதாகவும் தண்ணீருக்கான நுகர்வோர் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தவகையில், பிரிட்டனில் 10 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீர் வறுமையில் வாடுவதாக கூறிய நுகர்வோர் கவுன்சில், இந்த பிரச்னைக்கு முடிவுகட்டும் வகையில், பொதுமக்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

six + 18 =