மரியுபோல் நகரில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியின்றி ஒரு லட்சம் பேர் தவிப்பு

மரியுபோல் நகரில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியின்றி ஒரு லட்சம் பேர் தவிப்பு

உக்ரைன் அதிபர் கண்ணீர்

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்ய ராணுவத்தினர் அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். வான் வழியாக குடியிருப்பு கட்டடங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மரியுபோல் நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களாக ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியின்றி அவர்கள் தவிப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமன்றி மரியுபோல் மக்களுக்கு குடிதண்ணீரோ, மருத்துவ வசதிகளோ கிடைக்கவில்லை என்றும், அவர்களை மீட்கும் நடவடிக்கையிலும் ரஷ்ய ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.