பாலஸ்தீனத்தில் போலீசார்- பொதுமக்கள் மோதல்

பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாசை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த சமூக ஆர்வலர் நிசார் பானட் கடந்த வாரம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தலுக்குள்ளாகி கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து பாலஸ்தீன பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்த முயன்றபோது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் உருவானது. இதனால், பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

Add your comment

Your email address will not be published.

two × one =