வட அயர்லாந்து நூற்றாண்டு விழா இளவரசி வாழ்த்து

 

 

வட அயர்லாந்து உருவாகி 100 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு இளவரசி இரண்டாம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்நூற்றாண்டு பிரிட்டனுக்கும், அயர்லாந்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டு. நமது கடினம் நிறைந்த வரலாற்றை இந்நூற்றாண்டு நினைவுகூருகிறது. வட அயர்லாந்தில் நிலவும் தொடர் அமைதிக்காக அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அயர்லாந்தின் எதிர்காலம் உங்கள் தோள் மீது இருக்கிறது.

தலைமுறைகளைக் கடந்து உள்ளார்ந்த, செழிப்பான, நம்பிக்கைமிகுந்த சமுதாயத்தை அமைதியின் மூலம் வலுப்படுத்தும் பாதையை வட அயர்லாந்து மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர். வருங்காலங்களிலும் இது நமது வழிகாட்டும் நூலாக விளங்கட்டும் என்றார் இளவரசி.

அத்துடன், இளவரசர் பிலிப்புடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டதையும் இளவரசி அப்போது நினைவுகூர்ந்தார்.

Add your comment

Your email address will not be published.

12 − 3 =