இங்கிலாந்தில் ஜூனியர் டாக்டர்ஸ் என்று அழைக்கப்படும் பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்து இருக்கின்றனர்.
பெரும்பாலும் பயிற்சி மருத்துவர்களே நோயாளிகள் அனைவரையும் கூட இருந்து கவனித்து கொள்வதால், அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சமயத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று மருத்துவமனை தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings