ஊதிய உயர்வு பிரச்சினை காரணமாக பாஸ்போர்ட் ஊழியர்கள் 5 வாரம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாஸ்போர்ட் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஏப்ரல் 3 முதல் மே ஐந்தாம் தேதி வரை 5 வார காலத்திற்கு இந்த போராட்டம் நடைபெற உள்ளது. பெல்பர்ஸ்ட் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 4000க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதால், பாஸ்போர்ட் டெலிவரி அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடைக் காலத்தில் பிரிட்டன் மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சூழலில் பாஸ்போர்ட் ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் இப்போது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி பயணிக்கின்றனர்.
பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப் படையெடுக்கும் பிரிட்டன் மக்கள்

GIPHY App Key not set. Please check settings