பார்க் ரன் நிகழ்வுக்கு அனுமதி

பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அமைச்சர்கள் கடிதம்

இங்கிலாந்தில் பார்க் ரன் எனப்படும் 5 கிமீ பூங்கா ஓட்டம் வாரந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். இதில் திரளானோர் பங்கேற்று தங்கள் உடல் வலிமையை பறைசாற்றுவர். இந்நிலையில், கடந்த ஓராண்டுகாலமாக கரோனா பெருந்தொற்று காரணமாக பார்க் ரன் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது கரோனா படிப்படியாக குறைந்துவரும் சூழலில், திட்டமிடப்பட்ட வெளிஅரங்க விளையாட்டு போட்டிகளுக்கு மார்ச் 29ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. ஆனாலும், இடப் பிரச்னை காரணமாக பார்க் ரன் நிகழ்வுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய கேபினெட் அமைச்சர்கள் ராபர்ட் ஜென்ரிக், ஓலிவர் டவ்டன், கரோன பெருந்தொற்றிலிருந்து நாம் மீண்டுவரும் இந்தச் சூழ்நிலையில், உடல்வலிமைக்கும், மன உறுதிக்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதால், உடனடியாக பார்க் ரன் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =