ஜெர்மனியில் கால்பந்து மைதானத்தில் பாராசூட் விழுந்து ஏராளமானோர் காயம்

யூரோ 2020 கால்பந்து போட்டியில் ஜெர்மனியை 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் வென்றது. இதைத்தொடர்ந்து, ஜெர்மனியின் அலையன்ஸ் அரெனா கால்பந்து மைதானத்தில் பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்திக் கூச்சலிட்டனர். அப்போது, மைதானத்தில் பாராசூட்டில் ஓவர்ஹெட் கேமராவை கையில் வைத்தவாறு ரசிகர் ஒருவர் பறந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். திடீரென பாராசூட்டின் ஒரு பகுதி மின்கம்பியில் சிக்கியதால், அந்த பாராசூட் கடுமையாக கீழே விழுந்தது. இதில், அவர் உள்பட ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை மிகவும் அபாயகரமான நடவடிக்கை என்று கூறிய ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யோ”ஃ”பே, தவறு இழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 8 =