மே 17 முதல் எதற்கெல்லாம் அனுமதி?

வரும் மே 17 முதல் பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. அதன் விவரம்;
1. வெளிஅரங்கத்தில் 30 பேர் வரை கூடலாம்.
2. உள்அரங்கத்தில் அதிகபட்சமாக 6 பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் கூடி உரையாடலாம்.
3. கேளிக்கை விடுதிகள் (பப்ஸ்), மதுபானக் கூடம் (பார்), உணவகத்தின் உள்பகுதிகள் திறக்கப்படுகின்றன.
4. சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகம், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட உள்அரங்க பொழுதுபோக்கு கூடங்கள் திறக்கப்படுகின்றன.
5. கச்சேரி அரங்குகள், மாநாட்டு மையங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகியன திறக்கப்படுகின்றன. இங்கு பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
6. திட்டமிடப்பட்ட சிறார் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகளை உள்அரங்கத்தில் நடத்தலாம்.
7. உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நீராவி பிடிப்பதற்கான அறைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
8. ஹோட்டல்கள், விடுதிகள், பி அன்ட் பி எனப்படும் இரவில் தங்கி காலையில் உணவு உண்ணும் வசதியை ஏற்படுத்தி தரும் ஹோட்டல்கள் செயல்படலாம்.
9. திருமணம், வரவேற்பு உள்ளிட்ட சுபகாரியங்களில் 30 பேர் வரை கூடலாம்.
10. இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இட வசதியை பொறுத்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
11. இல்லங்களில் தங்கியிருப்பவர்களை சந்திப்பதற்கு அடையாளம் தெரிந்த 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர். இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதில் எந்தத் தடையும் இல்லை.
12. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளிலும் முகக் கவசம் கட்டாயம் அல்ல. கல்வி நிறுவனங்களில் உள்ள வழிபாட்டுக் கூடங்களிலும் முகக் கவசம் அணியாமல் மாணவர்கள் சென்று வரலாம்.
13. பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
14. வெளியிடங்களில் குடும்பமாக சந்திக்கும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதா வேண்டாமா என்பதை அந்தந்த குடும்பத்தினரே தீர்மானித்துக் கொள்ளலாம்.
15. பச்சைப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு எந்தவொரு தடையுமின்றி சென்று வரலாம்.
பொது இடங்களில் கட்டித் தழுவ அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், தனிமனித தொடர்பு கரோனா பரவலுக்கு நேரடி காரணமாக இருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அரசு கோடிட்டு காட்டுகிறது. எனவே, நண்பர்கள், குடும்பத்தினர் இடையிலான நெருங்கிய தொடர்பு குறித்த வழிமுறைகளை அடுத்த வாரம் திங்கள்கிழமை (மே 17) வெளியிடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், மருத்துவமனை, மருந்தகம், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

5 × three =