“இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்” – சத்குரு வேண்டுகோள்

“படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயமல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

”படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் என்றால் நாம் சாப்பிடும் விஷயமல்ல. பொங்கல் என்பதை நம் கலாச்சாரத்தில் உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். முக்கியமாக இது விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விழா. இந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால் ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் உங்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அதை கற்றுக்கொண்டு நீங்கள் கிராமத்திற்கு சென்று குறைந்தப்பட்சம் ஒரு 10 பேருக்காவது சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் நாட்டில் ஒரு பெரும் புரட்சியே நடந்துவிடும்.