அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் கட்டுக்கடங்காத தீ

மெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் வனப்பகுதியில் கடந்த 6ஆம் தேதி பற்றிய தீ, இன்னமும் கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவு} பகலாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, அப்பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 160 வீடுகளும், கட்டிடங்களும் உருக்குலைந்து போயின.

அமெரிக்கா, கனடாவில் இந்த ஆண்டு நிலவும் கடுமையான வெப்பம், சூறைக்காற்று காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

seven + eighteen =