60 ஆண்டுகள் கழித்து புத்துயிர் பெறும் இசைக்குழு

 

 

கரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த இசைக் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், 60 ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்கப்பட்ட யோர்க்ஷிர் சிம்போனி இசைக்கு புத்துயிரூட்டப்படுகிறது.

லீட்ஸ் நகரில் கடந்த 1947ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட யோர்க்ஷிர் சிம்போனி இசைக்குழு, 8 ஆண்டுகள் கழித்து கலைக்கப்பட்டது. தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில், இந்த இசைக் குழுவுக்கு புத்துயிர் அளிக்கப்படுவதாகவும், யோர்க்ஷிரின் கலாசார குரலை மீட்டெடுக்கப் போவதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் பென்கிரிக் தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில், இசை நம்மை கரோனா தொற்றிலிருந்து மீள வைத்து, மக்களின் மனவலிமையை பெருக்க செய்கிறது. மனித அனுபவத்தின் வர்ணனை ஓட்டம்தான் இசை. நமக்கு இசையும், இசைக் கலைஞர்களும் தேவை என்றார். மேலும், 16ஆம் போப் பெனிடிக்டுக்காக இசையமைத்த இசை வல்லுநர் ஆண்டனி தாம்ப்சனும் யோர்க்ஷிர் இசைக்குழுவில் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

யோர்க்ஷிர் இசைக்குழு இந்த ஆண்டு லீட் அருகே ஹேர்வுட் ஹவுஸ் பிக்னிக் ப்ராம்ஸ், டான்காஸ்டர் கீப்மோட் அரங்கில் நடைபெறவுள்ள பிரமாண்ட கச்சேரிகளில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

six + 1 =