ஆண்டுமுழுவதும் அரண்மனைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

 

இளவரசர் சார்லஸ் முடிவு

 

அரச குடும்பத்தின் அடுத்த வாரிசான இளவரசர் சார்லஸ், இந்த ஆண்டு முழுவதும் அரச குடும்பத்துக்கு சொந்தமான அரண்மனைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதியளிக்க முடிவு செய்திருக்கிறார்.

வேல்ஸ் மாகாண இளவரசரான அவர், பிரிட்டனின் அடுத்த இளவரசராக பதவியேற்றதும் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், பக்கிங்ஹாம் அரண்மனை, வின்ஸ்டர் காஸ்டில் க்ளீயரன்ஸ் ஹவுஸ் மாளிகை, சந்திரிங்ஹாம், பால்மோரல் பங்களா ஆகியவற்றை பொது இடமாக பிரகடனப்படுத்தவும், இந்த அரண்மனைகள் யாவும் இந்த ஆண்டு முழுவதும் அல்லது ஆண்டில் பெரும்பாலான நாள்கள் பொதுமக்களின் வசதிக்காக திறந்தே இருக்கவும் அவர் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் இளவரசர் என்ற தோரணையுடன் கம்பீரமாக இருந்தாலும், அரண்மனையையும், அதன் எழில்மிகு தோட்டத்தையும் பொதுமக்கள் பார்வையிடுவதில் எந்தவித தடையும் ஏற்படுத்த கூடாது என்று அவர் கருதுகிறார். கடந்த ஏப்ரலில் அரண்மனை மாடத்தையும், தோட்டத்தையும் பார்வையிட டிக்கெட் கோரி, ஏராளமானோர் ஆன்லைனில் விண்ணப்பித்ததால், இணையதள முகவரி ஸ்தம்பித்தது. இதனால், புதிய பதிவுகளை ராயல் கலெக்ஷன் டிரஸ்ட் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரண்மனை திறக்கப்படவில்லை.

பக்கிங்ஹாம் அரண்மனையை கடந்த 1820ஆம் ஆண்டில் நான்காம் ஜார்ஜ் நிர்மாணித்தார். அதாவது, பக்கிங்ஹாம் பங்களாவை அரண்மனையாக உருமாற்றி, கம்பீரமாக திகழ செய்தார். இன்றைக்கு பல்லுயிர் வாழ்விடமாக திகழும் இந்த அரண்மனையில், 1000க்கும் மேற்பட்ட மரங்களும், 320க்கும் மேற்பட்ட செடிகளும், புல்வெளிகளும் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

Add your comment

Your email address will not be published.

3 × 2 =