திறக்கப்பட்டது ஐரோப்பாவின் மிகப்பெரிய தோட்டம் 

இங்கிலாந்தின் சல்போர்டு நகரில், பாரம்பரிய தோட்டக்கலை துறையின் சார்பில், ஐரோப்பாவின் மிகப்பெரிய தோட்டம் திறந்துவைக்கப்பட்டது.

154 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தோட்டம், கரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக திறந்துவைக்கப்பட்டது. பாரம்பரிய மரங்களையும், செடிகளையும் தாங்கி 35 மில்லியன் பவுண்டில் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டம், பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பின் பலன் என்று ராயல் தோட்டக்கலை சமூகத்தின் இயக்குநர் ஜெனரல் சூ பிக்ஸ் தெரிவித்தார். இந்தத் தோட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் பார்வையிட வருவதன் மூலம் வருவாய் பெருகும் என்று ராயல் தோட்டக்கலை சமூகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறுகையில், இந்தத் திட்டத்தின் வாயிலாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 50 பேர் இங்கிருந்து 5 மைல் சுற்றுப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் நபர்கள் ஆவர். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தத் தோட்டத்தின் வாயிலாக ஆண்டுக்கு 13.2 மில்லியன் பவுண்ட் வருவாய் கிடைக்கும் என்றார்.

இந்த பிரமாண்ட தோட்டத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் வெஸ்டன் வால்ட் தோட்டம் அமைந்துள்ளது. இதுதான் பிரிட்டனின் மிகப்பெரிய சுவரால் சூழப்பட்ட தோட்டம். இதேபோல், பாரடைஸ் தோட்டமும் அமைந்துள்ளது. இங்கு ஆசியா மற்றும் மீதியானியர்களின் காலகட்டத்தில் செழித்தோங்கிய செடிகள் காண்பவர்களை கண்கவர வைக்கும் வகையில் நடப்பட்டுள்ளன.

இந்தத் தோட்டத்துக்காக சல்போர்டு நகர கவுன்சில் சார்பில் 19 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்யப்பட்டதாகவும், தோட்டத்தை வடிவமைப்பதில் தங்களின் பங்கு அளப்பரியது என்றும் அதன் தலைமை நிர்வாகி டாம் ஸ்டன்னர்ட் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

three × 4 =