தகனமேடையான திறந்தவெளி மைதானங்கள்!

 

இந்திய தலைநகர் டெல்லியில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இடுகாட்டில் இடமின்றி திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியன தற்காலிக தகனமேடையாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தி வரும் தீவிர தாக்கத்தால், பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அதிலும் திங்கள்கிழமை ஒரே நாளில் டெல்லியில் 380 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால், சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்கு இடமின்றி, திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்களில் தற்காலிக தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன், தங்கள் பாசத்துக்குரியவர்களை இழந்த உறவினர்களும், விறகுகளை அடுக்குவது, சம்பிரதாயங்களை மேற்கொள்வது போன்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன், ஐசியு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்தியாவில் கடந்த சில தினங்களில் மட்டும் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துவிட்டது. திங்கள்கிழமை 3,52,991 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 3,23,144 ஆக பதிவானது. இந்தியாவில் இதுவரை 1 கோடியே 70 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். 1,92,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

five × two =