ஆன்லைனில் பெண் பிரதமருக்கே பாலியல் தொல்லை

ஆன்லைனில் பதவி பாகுபாடின்றி, அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜீன் கிங், பிரிட்டன் நடிகை தாண்ட்வி நியூட்டன், எம்மா வாட்ஸன் ஆகியோருக்கு ஆபாச படங்களை அனுப்பி, விஷமிகள் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், பொறுமையிழந்த அவர்கள், பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக் நிறுவன நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரினர். அந்தக் கடிதத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் பிரபலங்கள் கையெழுத்திட்டனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கூறுகையில், சாதாரண ஒரு பெண்ணை போல், எனக்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆபாச படங்கள் ஆன்லைனில் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், நான் விரக்தியின் விளிம்பில் நிற்கிறேன் என்றார்.

Add your comment

Your email address will not be published.

17 − two =