கனடாவில் மேலும் ஒரு பள்ளியில் சவக்குழி

750க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைக்கப்பட்டது அம்பலம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 215 மாணவர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து, சஸ்கட்சிவான் மாகாணத்தில் உள்ள மரியெவல் இந்திய உறைவிடப் பள்ளியில் கடந்த புதன்கிழமை தரையை துளைத்து ரேடார் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 750க்கும் மாணவர்களின் சடலங்கள் தட்டுப்பட்டது. கனட வரலாற்றில் இது மிகவும் திடுக்கிடும் நிகழ்வு என குறிப்பிட்ட ஆய்வு நிறுவனம், எத்தனை மாணவர்களின் சடலங்கள் தென்பட்டன என்ற தெளிவான விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.

Add your comment

Your email address will not be published.

17 + eighteen =