ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த பளுதூக்கும் வீரர் ‘எஸ்கேப்’

உகாண்டாவை சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிட்டோலிகோ. இவர் ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வந்த நிலையில், ஒசாகா பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், பயிற்சியாளர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதனால், ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவியது. அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஒசாகாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நகோயா சிட்டியில், ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் எடுக்க முயன்றபோது அவர் சிக்கிக் கொண்டார். அவரை ஒசாகா அழைத்துவந்த பயிற்சியாளர்கள் புத்திமதி கூறி, மீண்டும் உகாண்டா அனுப்பிவைத்தனர்.

Add your comment

Your email address will not be published.

five × 2 =