ஜப்பானில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஒலிம்பிக்!

ப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் அரசர் நருஹிடோ தொடங்கிவைக்கிறார். கோவிட் பரவல் காரணமாக மிக குறைந்த விருந்தினர்களே தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

ஒலிம்பிக் போட்டியில் சுமார் 200 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவில் இருந்து 120 வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 220 பேர் டோக்கியோ சென்றுள்ளனர்.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. கடுமையான கட்டுப்பாடுகளையும் கடந்து இதுவரை தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் என இதுவரை 75 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்று கூட சந்தேகம் எழுந்தது.

ஆனால், எக்காரணம் கொண்டு போட்டிகள் ரத்து செய்யப்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

Add your comment

Your email address will not be published.

one + 15 =