முதியோர் இல்ல விதிமுறைகளில் தளர்வு

வேல்ஸ் மாகாணத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக இல்லங்களில் பராமரிக்கப்படும் முதியோரையும், குழந்தைகளையும் அவர்களது உறவினர்கள் வந்து பார்ப்பதற்கு கடந்த ஓராண்டு காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கோடை காலத்தில் இந்தத் தடை விலக்கப்பட்டு, அவர்களுக்கு நன்கு அறிமுகமான இருவர் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது யார் வேண்டுமானாலும் இல்லங்களில் பராமரிக்கப்படுவர்களை காண்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரே வேளையில் இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த உத்தரவு திங்கள்கிழமை (மே 24) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து வேல்ஸ் மாகாண முதன்மை அமைச்சர் மார்க் டிரெக்போர்டு கூறும்போது, இல்லங்களில் பராமரிக்கப்படுவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமான வாழ்க்கை தரத்தை இந்த மாற்றம் மேம்படுத்தும் என்றார்.

Add your comment

Your email address will not be published.

20 − 12 =