ஒபாமா செல்ல பிராணி சாவு: மிச்செலி உருக்கம்

 

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்துவந்த நாய், புற்றுநோய் காரணமாக சனிக்கிழமை உயிரிழந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி மிச்செலி ஒபாமா உருக்கமாக கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்த அனைவரும் தங்கள் வீட்டில் செல்ல பிராணியான நாய் வளர்ப்பது வழக்கம். அமெரிக்க அதிபர் எப்படி நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படுகிறாரோ அதுபோல் அவரது வீட்டில் வளரும் நாயும் முதல் நாய் என்ற பெருமையை பெறுவது உண்டு. இதில், டொனால்ட் டிரம்ப் மட்டும்தான் விதிவிலக்கு. அவர் அதிபராக இருந்த காலகட்டத்தில் நாய் ஏதும் வெள்ளை மாளிகையில் வளர்க்கவில்லை.
தற்போதைய அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில், இரண்டு நாய்களை தனது பராமரிப்பில் வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு நாய்கள் வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த காலத்தில், வெள்ளை மாளிகையில் ஏகபோக வாழ்க்கையை அனுபவித்துவந்த அவரது வளர்ப்பு நாயான “போ’, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டது. இதனால், ஒபாமா தம்பதி மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

செல்ல பிராணி போ உடனான பந்தம் குறித்து மிச்செலி வெளியிட்ட பதிவில், கடந்த 2009ஆம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கு வந்த நாளிலிருந்து எங்களுடன் போ மிகவும் சகஜமாக பழக தொடங்கியது. கருப்பு வெள்ளை போர்த்துகீசிய பிராணியான அது, எங்கள் அன்பு மகளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது. நாங்கள் நினைத்ததற்கும் மேலாக எங்களுடன் அன்பாக போ பழகியது.
வெள்ளை மாளிகையில் எத்தனை குறும்புகள் நடந்தாலும், அத்தனையையும் பொறுத்துக் கொள்ளும். குரைக்கும், ஆனால் கடிக்காது. கோடைக் காலங்கலில் நீச்சல் குளத்தில் குதித்து விளையாடுவது என்றால், போவுக்கு அலாதி பிரியம்.
எங்கள் இரு மகள்களும் பல்கலைக்கழகம் சென்ற பிறகு போ தான் எங்களது ஆறுதலாக இருந்தது. கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லாரும் வீடு திரும்பினோம். அப்போது போவை தவிர வேறு யாரும் அவ்வளவு மகிழ்ச்சியை அனுபவித்தது இல்லை. ஆனால், அந்த போ, இப்போது புற்றுநோய்க்கு இரையாகிவிட்டது என்று உருக்கமாக மிச்செலி ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

eighteen − one =