இங்கிலாந்து கால்பந்து வீரரை புகழ்ந்து தள்ளிய ஒபாமா!

இனவெறிக்கு எதிராகவும், வறுமை ஒழிப்பை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டுவரும் இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ரேஷ்போர்டுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார். ஆங்கில சேனல் சார்பில் இருவரும் ஷும் கால் (வீடியோ அழைப்பு) வாயிலாக உரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரேஷ்போர்டின் சமூக நலப் பணிகளை பாராட்டி ஒபாமா கூறுகையில், நான் என்னுடைய 23ஆவது வயதில் இருந்த நிலைமையைவிட சிறப்பான இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். சாதகமான எந்தவொரு விஷயத்தையும் சிறிய அளவில் செய்தாலும், அது பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும். அதேபோல் ஏராளமான நபர்கள் நமக்காக செய்த சின்னஞ்சிறு நற்செயல்கள் காரணமாகதான் நமது ஒவ்வொரு தலைமுறையும் படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது. சமூகநல இயக்கங்கள் அனைத்தும் இளைஞர்களிடம் இருந்துதான் தொடங்குகின்றன. நான் சிறுவனாக இருந்தபோது அமெரிக்க அதிபராக வேண்டுமென்று நினைத்தது இல்லை. எனக்கு அதிக திறமைகள் இருந்திருந்தால், நானும் மார்கûஸ போல், ஒரு விளையாட்டு வீரராகியிருப்பேன் என்றார். மேலும், புத்தக வாசிப்பு குறித்தும், அதற்கான அவசியம் குறித்தும் இருவரும் சிறிதுநேரம் விவாதித்தனர்.

ஒபாமா உடனான உரையாடல் குறித்து ரேஷ்போர்டு பின்னர் கூறியதாவது;மான்செஸ்டரில் உள்ள என் வீட்டு சமையலறையில் இருந்து ஒபாமாவுடன் பேசியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. சமூக நல இயக்கங்கள் இளைஞர்களிடமிருந்துதான் ஆரம்பிப்பதாக ஒபாமா கூறினார். ஆனால், இளைஞர்களின் குரலின் வலிமையை அவர்கள் உணர்வது இல்லை என்றார். இங்கிலாந்து கால்பந்து அணி இந்த வாரம் ஐரோப்பிய யூனியன் லீக் போட்டியில் தோல்வி அடைந்ததால், ரேஷ்போர்டு சமூகவலைதளங்களில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

6 + twelve =