பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆசிய, ஆப்பிரிக்கா கண்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதிலும் ஆங்கில கால்வாய் வழியாக தினந்தோறும் கள்ளத்தோணியில் ஏராளமானோர் பிரிட்டனுக்கு வருகின்றனர். இதனால் பிரிட்டனில் பொருளாதாரச் செலவு அதிகரித்து வருகிறது. எனவே சட்ட விரோதமாக பிரிட்டனில் குடியேறும் அகதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அகதிகளை தடுப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது. இது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசும்போது, பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறும் எந்த ஒரு அகதியும் தடுத்து நிறுத்தப்படுவார். மேலும் அவர்கள் படகிலிருந்து பிரிட்டனில் காலை வைக்கும் அடுத்த நொடியே கைது செய்யப்படுவர்.
இந்த கடுமையான நடவடிக்கை பிரிட்டனில் அகதிகளாக குடும்பத்தினருடன் குடியேறும் மக்களுக்கும் பொருந்தும் என்று பிரதமர் ரிஷி சுனக் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
GIPHY App Key not set. Please check settings