கரோனா பாதித்தவர்களுடன் தொடர்புடையவரா நீங்கள்… அப்போ இதை படியுங்க

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. அதற்கான ஆய்வு இங்கிலாந்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்த சோதனையின்கீழ், கரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் 7 நாள்கள் தினசரி அடிப்படையில் சோதனை நடத்தப்படும். இதில், அவர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்படாத வரை அவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம். 10 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

இந்த சோதனையின்படி, மே 9ஆம் தேதி முதல் கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 40,000 பேரிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது. 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். சாதாரணமாக, ஆய்வகத்தில் நடத்தப்படும் பிசிஆர் சோதனையில், முடிவு வெளியாக 24 மணிநேரம் வரை ஆவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

twelve + eighteen =