நம்பிக்கையில்லா தீர்மானம்: கவிழ்ந்தது ஸ்வீடன் அரசு

வீட்டு வாடகை விவகாரத்தில் ஸ்வீடன் நாட்டின் ஆளும் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திடீரென திரும்ப பெற்றதால், பிரதமர் ஸ்டெஃபான் லோஃபஸ் தலைமையிலான அரசு மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில் 181 பேர், தீர்மானத்தை ஆதரித்ததால், அரசு கவிழ்ந்தது. 51 உறுப்பினர்கள் வாக்கெப்பில் பங்கேற்கவில்லை. ஸ்வீடனில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாயிலாக ஓர் அரசு கவிழ்வது இதுவே முதல்முறையாகும்.

Add your comment

Your email address will not be published.

3 × one =