கரோனா: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் உயிரிழப்பு ஏதுமில்லை!

பிரிட்டனில் முதன்முறையாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் கரோனாவுக்கு ஒருவர் கூட பலியானதாக திங்கள்கிழமை பதிவாகவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வேல்ஸ் நாட்டில் மட்டும் 4 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். கரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு வீதமும் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறிய நிபுணர்கள், தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றுவதாலேயே இந்த இலக்கை எட்ட முடிந்ததாக தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

1 × two =