சைபர் தாக்குதலை எதிர்கொள்ள சிறப்புக் குழு

ஐரோப்பிய யூனியன் அமைக்கிறது

கடந்த வாரம் அமெரிக்காவின் எரிபொருள் விற்பனைக்கான இணையதள முகவரியில், சைபர் மோசடி பேர்வழிகள் ஊடுருவி, ஹேக் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், ஐரோப்பிய நாடுகளிலும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் 432 ஆக இருந்த சைபர் மோசடிகள், கடந்த ஆண்டு 756 ஆக அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த சைபர் நிபுணர்களை கொண்ட சிறப்புக் குழு ஏற்படுத்த போவதாக ஐரோப்பிய கமிஷன் துணைத் தலைவர் மார்கெரட் சினாஸ் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

one × five =