நைட் கிளப் செல்ல கோவிட் பாஸ்போர்ட்

இளைஞர்கள் ஆதரவு

இங்கிலாந்தில் புற்றீசல் போல ஆங்காங்கே முளைத்திருக்கும் நைட் கிளப்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று மதுவிருந்துடன் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது வழக்கம். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டும், கைகளைத் தட்டிக் கொண்டும் ஆடுவதால், இங்கு சமூக இடைவெளியை எள்ளளவும் கடைப்பிடிக்க இயலாது. எனவே, வரும் செப்டம்பரில், நைட் கிளப் செல்ல வேண்டுமாயின், தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தியிருந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத இளைஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

seven + 9 =