நாளை அடுத்தகட்ட தளர்வுகளை அறிவிக்கிறார் பிரதமர்

 

தியேட்டர்கள் செயல்பட வாய்ப்பு

 

இங்கிலாந்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை (மே 10) அறிவிக்கிறார்.

அதன்படி இங்கிலாந்தில் வெளிப்புற சந்திப்பின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றும், அதேவேளையில் நிகழ்ச்சிகளில் 30 பேர் வரை பங்கேற்பதற்கான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெளிப்புற சந்திப்புகளுக்கான கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால், பொது இடங்களில் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

மேலும் 6 பேர் அல்லது இரு குடும்பத்தினர் உள்அரங்கில் சந்தித்து உரையாடுவதில் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்கம், சிறுவர்களுக்கான உள்அரங்க குழு விளையாட்டுகள், உடற்பயிற்சி வகுப்புகள் ஆகியன மீண்டும் செயல்பட தொடங்கும்.

இந்த தளர்வுகள் அனைத்தும் மே 17 முதல் நடைமுறைக்கு வருவதாக கேபினெட் அலுவலகக அமைச்சர் மிக்கேல் கோவ் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

three × 1 =