தமிழக செய்திகள் சில வரிகளில்…

  • தமிழக அரசிடம் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. மத்திய அரசு சப்ளை செலுத்தினால்தான் மேற்கொண்டு தடுப்பூசி முகாமை தொடர முடியும் என்றார் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
  • விழுப்புரத்தில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.
  • தமிழகத்தில் அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தார்.
  • தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 11 மருத்துவக்கல்லூரிகள் அடுத்த ஆண்டுக்குள் செயல்பட தொடங்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

Add your comment

Your email address will not be published.

fourteen − two =