இந்திய செய்திகள் சில வரிகளில்…

  • ணு ஆயுதங்களை சுமந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல அதிநவீன அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
  • கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்கும் வகையில், ரூ.1.10 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். இதில் சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ந்தியாவில் அச்சுறுத்தல் முயற்சிகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள இயலாது என மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
  • ந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த டி20 கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியிருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
  • ம்மு காஷ்மீர், லடாக்கை தனி நாடாக காட்டும் வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • ட்டார்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • ந்த வாரத்தின் முதல் தினமான திங்கள்கிழமை மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 189 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 52,735ல் நிலைபெற்றது.

Add your comment

Your email address will not be published.

eighteen − five =