அமெரிக்காவில் வெறுப்புக் குற்ற தடுப்பு மசோதாவுக்கு அதிபர் ஜோ பிடன் ஒப்புதல்

அமெரிக்காவில் வெறுப்புக் குற்றத் தடுப்பு மசோதாவுக்கு அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

 

அமெரிக்காவில் கரோனா பரவலுக்கு ஆசிய கண்டத்தினர்தான் காரணம் எனக் கூறி, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களுக்கு முடிவுகட்டும் வகையிலும், இதனால் பாதிக்கப்படும் நபர்கள் உள்ளூர் அளவிலும், மாகாண அளவிலும் எளிதில் புகார் தெரிவிக்கும் வகையிலும் வெறுப்புக் குற்ற தடுப்பு மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதவை பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கிரேஸ் மேங்க் மற்றும் மேஸி ஹிரனோ ஆகியோர் கொண்டுவந்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 362 உறுப்பினர்களும், எதிராக 62 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அனைவரும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆவர்.

 

பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதால், அதிபர் ஜோ பிடனின் பரிசீலனைக்கு சென்றது. இதற்கு ஒப்புதல் தெரிவித்த அவர், இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் ஒருமைப்பாட்டை வெறுப்புணர்வும், இனவாதமும் தடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த மசோதாவை அதிபர் ஜோ பிடனிடம் அறிமுகம் செய்துவைத்த துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ், “”சமுதாயத்தில் வெறுப்புணர்வு எப்படி நுழைந்தது என்பதையும், இதற்கு எதிராக அனைவரும் ஒற்றுமையுடன் நிற்கும்போது தேசம் எவ்வளவு வலிமை பெறும் என்பதையும் எனது சொந்த அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தேன்” என்றார்.

Add your comment

Your email address will not be published.

7 − 4 =