புதிய எல்லை திட்டம் பிரிட்டன் பயணத்தை எளிமையாக்கும்

 

உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் தகவல்

 

பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினர் ஆன்லைனில் மின்னணு ஒப்புதல் (எலக்ட்ரானிக் பெர்மிட்) பெற வழிவகை செய்யும் புதிய எல்லை திட்டம் பிரிட்டன் பயணத்தை எளிமைப்படுத்தும் என்று உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் தெரிவித்தார். மேலும், பிரிட்டன் வரும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின்படி, விசா அல்லது குடியேற்ற அனுமதி இன்றி, பிரிட்டன் வருபவர்கள், ஆன்லைனில் மின்னணு ஒப்புதல் பெற வேண்டும். பணி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக பிரிட்டனில் 6 மாதம் தங்கியிருப்பவர்கள், இந்த முறையில் ஒப்புதல் பெற வேண்டும். 6 மாதங்களுக்கு மேல் தங்குபவர்கள் கட்டாயம் விசா பெற வேண்டும்.

இந்த புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர் கட்சி, குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் பிரிட்டன் அரசு செயலிழந்துவிட்டதாக விமர்சனத்தை முன்வைத்தது.

Add your comment

Your email address will not be published.

13 − two =