தமிழக செய்திகள்…

மிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்றுமுதல் ஐ.டி.ஐ மற்றும் தட்டச்சு பயிற்சி மையங்கள் திறக்கப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

பள்ளிகளில் பாலியல் புகார் குறித்து மாணவிகள் தெரிவிப்பதற்கு ஏதுவாக புகார் பெட்டிகளை வைக்க வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சேலத்தில் பெண் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பயணச் சீட்டை வடமாநில இளைஞர்களிடம் கொடுத்து பணம் வசூலித்த கன்டக்டர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கரோனா 3-ஆம் அலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

nineteen − three =